முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாக்-அணிக்காக நிறைய பாடுபட்டேன்!… ஆனால்?… பாபர் அசாம் உருக்கம்!

06:41 AM Nov 16, 2023 IST | 1newsnationuser3
Advertisement

கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் அணியின் பெருமை மற்றும் மரியாதையை நிலைநிறுத்த நிறைய பாடுபட்டேன் என்று கேப்டன் பதவில் இருந்து விலகிய பாபர் அசாம் உருக்கமாக கூறியுள்ளார்.

Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போதே பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு உறுப்பினர்கள் மொத்தமாக நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். இதுகுறித்து பாபர் அசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் இருந்து பாகிஸ்தான் அணியை வழிநடத்த அழைக்கப்பட்டது இப்போது நினைவில் இருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் என்று அனைத்து சோதனைகளையும் சந்தித்தேன். ஆனால் பாகிஸ்தான் அணி மீதான மதிப்பை உயர்த்தவும், பெருமையடைய செய்யவும் உண்மையான போராடினேன். ஒயிட் பால் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை நம்பர் 1 இடத்திற்கு அழைத்து சென்றேன். நிச்சயம் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என்று அனைவரின் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த பலன் தான் அது. தற்போது 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்.

எனக்கு கடினமான முடிவு என்றாலும், இதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன். அதேபோல் பாகிஸ்தான் அணிக்காக 3 வகையான கிரிக்கெட் போட்டிகளில் வீரராக விளையாடுவேன். அடுத்த கேப்டனுக்கு எனது முழு ஆதரவையும், அர்ப்பணிப்பையும் வழங்குவேன். இத்தனை காலமாக என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Tags :
Babar Azam meltsபாக்-அணிக்காக நிறைய பாடுபட்டேன்பாபர் அசாம் உருக்கம்
Advertisement
Next Article