முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருச்சி விமான விவகாரம்!. அதிரடி உத்தரவிட்ட மத்திய அமைச்சர்!

Trichy flight issue!. Central minister who ordered action!
09:12 AM Oct 12, 2024 IST | Kokila
Advertisement

Trichy flight: திருச்சியில் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஆய்வு செய்யுமாறு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Readmore: ரவுடிகள் என்கவுன்டரில் சந்தேகம்!. விசாரணையை கையில் எடுத்த மனித உரிமைகள் ஆணையம்!

Tags :
Central minister orderOrder to inspectTrichy flight issue
Advertisement
Next Article