பழங்குடியின மக்கள் பற்றி அறிந்திடாத உண்மைகள்..! மனிதர்களை சாப்பிடும் மர்மம்.! நரபலி.!
உலகம் என்ன தான் நாகரீகம் தொழில்நுட்பங்கள் என வளர்ந்து பல முன்னேற்றங்களை கண்டாலும் சில மக்கள் தங்களது இனம் மற்றும் கலாச்சாரம் என உலகின் பார்வையில் இருந்து ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பழங்குடி இன மக்கள். இவர்கள் தாங்கள் புது சமூகத்துடன் கலந்தால் தங்களது கலாச்சாரம், இனம் மற்றும் நிலத்திற்கு ஆபத்து வரும் எனக் கருதி தங்களை பொதுச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி தங்களது பழங்குடியின சமூக குழுக்கள் உடனே பல நூற்றாண்டுகளாக தங்களது மரபு மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களிடம் பல வினோதமான மற்றும் ஆபத்தான பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. இவர்கள் நர மாமிசம் சாப்பிடுபவர்களாகவும் இருக்கிறார்கள். உலகின் ஆபத்தான பழங்குடி மக்கள் மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சென்டினலீஸ்கள் என்று அழைக்கப்படும் இந்தப் பழங்குடியினர் இந்தியாவின் தீவான அந்தமானின் வடக்கு சென்டினஸ் தீவில் வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்கள் ஆவர். இவர்கள்தான் உலகின் மிக ஆக்ரோஷமான பழங்குடியினர் என அறியப்படுகிறது. இந்த பழங்குடியின மக்கள் வெளிமக்களின் தொடர்பை அதிகம் எதிர்ப்போர்களாக இருக்கின்றனர். இந்த தீவிற்கு சென்ற பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.
கரிப்ஸ் என்று அழைக்கப்படும் இந்தப் பழங்குடியின மக்கள் அமெரிக்காவின் அருகில் இருக்கும் கரீபியன் தீவுகளில் வாழும் பழங்குடியினர். இவர்கள்தான் உலகில் முதல் முதலில் அறியப்பட்ட நர மாமிசம் சாப்பிடும் பழங்குடியின மக்கள். இந்தப் பழங்குடியின மக்களிடமிருந்து தான் மனித மாமிசத்தை சாப்பிடும் பழக்கம் பரவியதாக நம்பப்படுகிறது. இவர்கள் முதலில் கனிபா என அழைக்கப்பட்டதாகவும் நாளடைவில் அது கரிப்ஸ் என மாறியதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆஸ்டெக் பழங்குடியினர் இதுவரை உலகில் அறியப்படாத ஆக்ரோஷமான பழங்குடியின மக்கள். இவர்கள் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு முன்பே அந்த நிலப் பரப்பில் வாழ்ந்து வரக்கூடிய பழங்குடியினர். நரபலி கொடுப்பது மற்றும் மனிதர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களது இதயத்தை எடுத்து தின்பது என கொடூரமான பழக்கங்களைக் கொண்ட பழங்குடியின மக்கள். இவர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களான சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோரை மகிழ்விப்பதற்காக மனித உயிர்களை நரபலி கொடுக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.