முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிக்கிய பாஜக அமைச்சர்...! தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற எடப்பாடி...!

06:20 AM Mar 20, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் சோபா அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள Whitefield பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் சமிபத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தென் மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து அந்த மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் NIA அறிவித்திருந்தது. இந்த வழக்கு NIA தற்போது விசாரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் பெங்களுருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணையமைச்சர் ஷோபா, இந்த குண்டு வெடிப்பு குறித்து பேசியிருந்தார். அப்போது குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தான்” என்று கூறினார். மேலும் டெல்லியிலிருந்து வருபவர்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள ‘மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர் என்றும் சர்ச்சைக்கருத்தை தெரிவித்தார். அவரது கருத்திற்கு பல அர்த்தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி; தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article