"பரபரப்பு..." பொங்கலுக்கு ஊருக்கு போவதில் சிக்கலா.?காலவரையற்ற ஸ்ட்ரைக்கை அறிவித்த போக்குவரத்து சங்கங்கள்.!
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்று வந்த தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் ஏஐடியூசி மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஓய்வூதியம் ஊதிய உயர்வு காலி பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சபடி உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து துறை இடையேயான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வந்தது. இதன் தோல்வியை தொடர்ந்து வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து இருக்கிறது.
ஏ ஐடியுசி, சிஐடியு மற்றும் ஹெச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன மறுபுறம் அண்ணா தொழிற்சங்கம் தனியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வெளியிட்டு இருக்கிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி உதவிகளை கடந்த 9 ஆண்டுகளாக போக்குவரத்து துறை காலதாமதப்படுத்தி வருவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை வருகின்ற நேரத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பது பொது மக்களை மிகவும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.