Train | ரயில் பயணிகளே..!! இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க..!! ஒரு ஃபோன் போதும் உடனே தீர்வு..!!
நாட்டில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில் டிக்கெட் விலை குறைவு மற்றும் வசதி போன்றவை தான் ரயிலை தேர்வு செய்ய காரணமாக இருக்கிறது. அதேபோல, வேகமாகவும் சௌகரியமாகவும் ரயிலில் பயணிக்கலாம். இந்நிலையில், ரயில்களில் பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்திய ரயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய ரயில்வே ஹெல்ப்லைன் எண்களின் நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.
* ரயில்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஹெல்ப்லைன் எண் இதுதான். ரயில்வே தொடர்பான தகவல்களுக்கு 139 என்ற எண்ணை அழைக்கலாம். பயணிகள் பொதுவான தகவல், PNR நிலை சரிபார்ப்பு, ரயில் அட்டவணை மற்றும் நடைமேடை விவரங்களுக்கு இந்த நம்பரைப் பயன்படுத்தலாம்.
* ரயில் பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. இந்திய ரயில்வே இதற்காக ஹெல்ப்லைன் எண் 182-ஐ உருவாக்கியுள்ளது. சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்து பயணிகள் இதில் புகார் அளிக்கலாம். இந்த எண்ணில் அவசர காலங்களில் உதவி பெறலாம்.
* ரயிலில் பயணிக்கும்போது பயணிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த ஹெல்ப்லைன் பயணிகளை மருத்துவ நிபுணர்களுடன் இணைத்து மருத்துவ உதவியை வழங்குகிறது.
* பயணிகளின் புகார்களைக் கேட்கவும், கருத்துகளைப் பெறவும் இந்திய ரயில்வேயின் புகார் உதவி எண் இதுவாகும். புகாரைப் பதிவு செய்ய அல்லது திருத்தம் செய்ய பயணிகள் 1800-111-139 என்ற எண்ணை அழைக்கலாம்.
* இந்திய ரயில்வே “கிளீன் மை கோச்” சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பெட்டிகளுக்கு சுத்தம் செய்யும் சேவைகளைக் கோரலாம். இந்தச் சேவையைப் பெற உங்கள் PNR எண்ணை உள்ளிட்டு 58888 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
* ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) உதவிக்கு ரயில் பயணிகள் 1512 என்ற ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த ஹெல்ப்லைன் நம்பர் பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
* ரயில்களில் அல்லது ரயில்வே வளாகங்களில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட அவசரநிலைகளைப் புகாரளிக்க 1098 என்ற குழந்தை உதவி எண்ணை அழைக்கலாம். ரயில் பயணத்தின் போது எந்த ஒரு பெண்ணும் தொந்தரவு அல்லது தொல்லைகளை சந்தித்தால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதில் உடனடியாக அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
Read More : Good News | அரசு ஊழியர்களின் மனதை குளிரவைத்த அறிவிப்பு..!! இனி அகவிலைப்படி 50% ஆக உயர்வு..!!