4 மணி நேரத்திற்கு முன்னாடி டிக்கெட் புக் செய்தால் போதும்.. ரயில்களில் சீட் கட்டாயம் கிடைக்கும்..!! எப்படி தெரியுமா?
அவசர தேவைகளுக்கு தட்கல் டிக்கெட்டை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை.. பயணிகளுக்கு கடைசி நேரத்தில் பயணம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதுதான் கரண்ட் டிக்கெட் புக்கிங். பொதுவாகவே ரயில்களில் உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பது எளிதானது அல்ல. பயணத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவு விருப்பம் உள்ளது. இருப்பினும், தட்கல் டிக்கெட்டுகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால், தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் பிரச்சினை இருக்கிறது. இனி ரயில்களில் சீட் கிடைப்பது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
நாம் நமக்கான இருக்கையை தேர்வு செய்து அன்றைய நாள் பயணத்தையும் தொடரலாம் என்கிறது ஐஆர்சிடிசி. இந்த புதிய வசதிக்குதான் கரண்ட் புக்கிங் (current ticket booking) என்று பெயர். இந்த தற்போதைய டிக்கெட்டினை, ஐஆர்சிடிசி ஆப் அல்லது வெப்சைட்டில் சென்று, அன்றைய நாளுக்கான என்ற பயணம் செய்யும் நாளுக்கான டிக்கெட்டை நாம் தேர்வு செய்து கொள்ள முடியும்.. இந்த டிக்கெட்டை பயணம் செய்யும் நாளில் மட்டுமே நம்மால் எடுக்க முடியும். அதேபோல, ஒருமுறை தேர்வு செய்துவிட்டால், பிறகு, மறுபடியும் அதனை மாற்ற முடியாது. அதனால், ஆரம்பத்திலேயே கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.
இந்த டிக்கெட்டுகளுக்காக கூடுதல் தொகை வசூலிக்கப்படாது. இந்த வசதி, தட்கலைவிட எளிதானது, கட்டணமும் குறைவு. சாதாரண டிக்கெட்டை விட 10-20 ரூபாய் மலிவானது. குறிப்பாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே கரண்ட் டிக்கெட்டை புக்கிங் செய்யலாம். இதன்மூலம் ரயிலில் காலியாக உள்ள சீட்டில் இருக்கையில் உட்கார்ந்தபடியே எளிதாக பயணிக்கவும் முடியும். ஆனால், பெர்த் காலியாக இருந்தால்தான், இந்த கரண்ட் டிக்கெட் கிடைக்கும்.
இந்த கரண்ட் டிக்கெட் எப்படி புக் செய்வது?
* ஐஆர்சிடிசி செயலியில், "ட்ரெயின்" என்ற பிரிவை தேர்வு செய்து, அதில் "ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடம்" இவகைளை கவனமாக தேர்வு செய்து பதிவிட வேண்டும்.
* இப்போது நமக்கு வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் ஸ்க்ரீனில் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு தேவையான படுக்கை வசதி அல்லது AC வகுப்பு வசதியை தேர்வு செய்ய வேண்டும்
* இப்போது கரண்ட் இருக்கைகளின் எண்ணிக்கைகள் தென்படும். அதில் NOT AVAILABLE என்று வந்தால், அதில் கரண்ட் டிக்கெட் இல்லை என்று அர்த்தம். அப்படியிருந்தால், நாம் பயணம் செய்வதற்கு முன்பேயே இதனை புக் செய்து கொள்ளலாம்.
Read more ; ஒரே ஒரு போன் கால்.. 10 கோடி அபேஸ்.. இஞ்சினியரை அலற விட்ட புதுவித மோசடி..!!