முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Train | சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில் முற்றிலும் ரத்து..!!

08:58 AM Feb 24, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை மற்றும் மாநகர பேருந்து சேவைகளை கூடுதலாக இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை, கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்களின் சேவை நாளை (பிப்.25) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12, 12,10, 12.20, 12.40, 12.50, 1, 1.15, 1.30, 2, 2.15, 2.30 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 11, 11.50, மதியம் 12.30, 12.50, 1.45, 2.15 மணி, சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, மதியம் 12.15, 12.45, மதியம் 1.30, 1.45, 2.15, மாலை 4.30 மணி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி, திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளும் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

எனினும் பயணிகளின் வசதிக்காக நாளை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே காலை 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, 1.45, 1.55, 2.40, 2.55 மணிக்கும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.30, 9.40, 10.55, 11.05, 11.30, நண்பகல் 12,மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்து சேவைகளை கூடுதலாக இயக்குமாறு சம்மந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் தெரிவித்துள்ளது.

Read More : ’அடக்கடவுளே’..!! ’அதை யாரும் நம்பாதீங்க’..!! TVK பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு அறிக்கை..!!

Advertisement
Next Article