Train Accident | விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து பேரிடர் மீட்புக்குழு, மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “சற்று முன் கஞ்சன் ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Read More : ’மாணவர்களை கண்காணியுங்கள்’..!! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவுபோட்ட பள்ளிக்கல்வித்துறை..!!