அவலம்!. வீரமரணமடைந்த ராணுவ வீரர்கள்!. கழுதைகள் மீது உடல்களை ஏற்றிச்செல்லும் அதிர்ச்சி!. வீடியோ வைரல்!
Pakistan Army:பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் உடல்களை கழுதைகள் மீது ஏற்றி கொண்டு செல்லப்படும் அவல நிலை வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பன்னு என்ற மாவட்டத்தில் சோதனைச் சாவடியை கைப்பற்ற பயங்கரவாதிகள் முயன்றனர். அப்போது நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, காரில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில், 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மறைக்க பாகிஸ்தான் நிர்வாகம் முயற்சித்து வருகிறது.
இந்த முயற்சியின் ஒருபகுதியாக, இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை அந்த இடத்தில் இருந்து மறைக்க உடனடியாக அகற்ற முயற்சித்தனர். அப்போது, ராணுவ வீரர்களின் உடல்களை கழுதைகள் மீது ஏற்றி செல்லப்பட்டன. இதுதொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து ராணுவ தளபதி அசீம் முனீர், பாகிஸ்தான் பிரதமரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் பலூசிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு பிரதமர் மற்றும் ராணுவ தளபதி தலைமையிலான குழு ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாகாண உச்ச அமைப்புகளின்கீழ் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான கூட்டாட்சி நடவடிக்கைகள் செயல்படுத்துவதை கண்காணிக்கும். கூடுதலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையம் மற்றும் உளவுத் துறை இணைவு மையங்கள் ஆகியவை அச்சுறுத்தல்களை திறம்பட கண்டறிந்து சமாளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை விமானங்களில் எடுத்துச் செல்லாமல் கழுதைகள் மீது ஏற்றிச்சென்றது ஏன் என்று கேள்வி எழுந்து வருகிறது. மேலும் முதல்வர் மரியம் நவாஸ் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டிருந்ததால், வீரர்களை ஏற்றிச்செல்ல ஹெலிகாப்டர்கள் கிடைக்காததால் கழுதைகள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Readmore: ஷாக்!. அதிகரித்து வரும் வறுமை!. பாலியல் சுற்றுலா மையமாக மாறிய ஆசிய நாடு!.