ஷாக்!. அதிகரித்து வரும் வறுமை!. பாலியல் சுற்றுலா மையமாக மாறிய ஆசிய நாடு!.
Japan: அதிகரித்து வரும் வறுமை காரணமாக ஜப்பானின் டோக்கியோவில் இளம் பெண்கள் பாலியல் தொழிலுக்கு திரும்பிவருவது கவலையளிக்கிறது.
பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தி, ஜப்பான் பாராளுமன்றத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த சீர்திருத்தம் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில், வயது வரம்பை ஜப்பான் அரசு உயர்த்தியது.
ஜப்பான் ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தது. இது வெளிநாட்டு நாணயத்தை ஈர்த்தது மற்றும் சில ஜப்பானிய ஆண்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கிய நாடுகளில் இருந்து பெண்களுடன் திருமணத்திற்கு புறம்பான உறவுகளை தேட வழிவகுத்தது. ஆனால் இந்த நிலைமை தற்போது, தலைகீழாக மாறிவிட்டது. வேலை வாய்ப்புகள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் சற்று வறுமை நிலையை அடைந்துள்ளது.
அதனால், டோக்கியோ இப்போது, பாலியல் சுற்றுலாவுக்கான இடமாக மாறிவருகிறது. இளைஞர்களை பாதுகாக்கும் ஜப்பான் லைசன் கவுன்சிலின் பொதுச்செயலாளர் யோஷிஹிட் தனகா கூறுகையில், ஜப்பான் ஒரு ஏழை நாடாக மாறிவிட்டது என்று கவலை தெரிவித்தார். கொரோனா தொற்றுநோயை தொடர்ந்து பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் டோக்கியோவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறினார்.
வெளிநாட்டு இளைஞர்களின் வருகையால், 20 வயதுடைய இளம்பெண்கள், வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலுக்கு திரும்பிவருவது கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இருப்பினும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. அதாவது, டோக்கியோவின் கபுகிச்சோ மாவட்டத்தில் விபச்சார வணிகம் வேகமாக அதிகரித்துள்ளது. இங்கு, வேலைவாய்ப்பையும், சிறந்த வாழ்க்கை தரத்தையும் தேடும் இளம்பெண்கள், பெருகி வரும் நிதி அழுத்தங்களால் தாங்களே பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த தொழிலில் சிக்கியவுடன் பல கருக்கலைப்பு உட்பட பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.