குற்றாலம் அருவியில் திடீரென்று விழுந்த கற்கள்..!! பீதியில் அலறிய சுற்றுலா பயணிகள்..!!
அருவிகள் நகரமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டும். மூலிகை மணம் நிறைந்த அருவி நீரில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மெயினருவி பல ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த இயற்கையான அருவி ஆகும். இந்த அருவியின் பிரமண்டத்தை பார்த்து அதிசயிக்காத சுற்றுலா பயணிகளே இல்லை என்று கூறலாம்.
இந்நிலையில், வழக்கம் போல் குற்றாலம் மெயின் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருவியின் அடிப்பகுதியில் உள்ள பாறையில் இருந்து கற்கள் உடைந்து மூன்று பேர் மீது விழுந்தது. காயம் அடைந்தவர்கள் தற்போது தென்காசி அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தற்போது குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; ’குரங்கு அம்மை பாதிப்பு’..!! மத்திய அரசை பாராட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!