ஓசியில் பைக் சர்வீஸ் பண்ணித்தர சொல்லி டார்ச்சர்..!! கஞ்சா கேஸ் போடுவதாக மிரட்டி ஒர்க் ஷாப் ஓனரை தாக்கிய போலீஸ் எஸ்.ஐ.!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் திண்டுக்கலை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பைக் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். அதேபோல், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அண்ணாதுரை. இவரது, ராயல் என்பீல்டு பைக்கை சீனிவாசனிடம் கொடுத்து சர்வீஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால், பைக் சர்வீஸ் செய்ததற்கான தொகையை கொடுக்காமல் மிரட்டி வந்துள்ளார். மேலும், பைக்கை தொடர்ந்து சர்வீஸ் செய்யவிடுவதும், பாக்கி ரூ.8,600 கொடுக்காமல் பைக்கை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது, பாலமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அண்ணாதுரை, அங்கு பணிபுரியும் மற்ற காவலர்களின் பைக்கையும் சர்வீஸ் செய்து தர வேண்டுமென சீனிவாசனிடம் கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே பழைய பாக்கி இருப்பதால், பணத்தை கொடுத்தால் தான் சர்வீஸ் செய்து தருவேன் என சீனிவாசன் கூறியுள்ளார்.
இதனால், எஸ்.ஐ. அண்ணாதுரை அடிக்கடி சீனிவாசனை தொலைபேசியில் அழைத்து வாகனத்தை பழுது பார்த்து தருமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அண்ணாதுரையின் செல்போன் அழைப்பை சீனிவாசன் தவிர்த்துள்ளார். இதனால், கோபமடைந்த அண்ணாதுரை கடந்த 4ஆம் தேதி பதிவு செய்யப்படாத ஒரு காரில் சீனிவாசனின் கடைக்கு சென்று அவரை வாகனத்தில் காரில் மிரட்டி தாக்கியுள்ளார்.
மேலும், வாகனங்களை சர்வீஸ் செய்யவில்லை என்றால், கஞ்சா உள்ளிட்ட வழக்குகளை உன் மீது தூக்கிப் போட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இந்நிலையில், சீனிவாசனை எஸ்.ஐ. அண்ணாதுரை தாக்கி காரி ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கமெண்ட் செய்து வருகின்றனர்.
Read More : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு..? பதறிப்போன குடும்பம்..!! ICU-வில் தீவிர சிகிச்சை..?