வீட்டு வேலைக்கு வந்த 23 வயது இளம்பெண்; ஆசையை அடக்க முடியாமல் 78 முதியவர் செய்த காரியம்..
சென்னை மாவட்டம், வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 78 வயதான பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். கரூரில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக வேலை செய்து வந்த இவர், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். பொன்னையாவின் மனைவியும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பொன்னையா மட்டும் தனியாக வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக பொன்னையாவால் வீட்டு வேலைகளை செய்ய முடியவில்லை.
இதனால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், பொன்னையாவின் வீட்டில் வேலை பார்ப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில், 23 வயது இளம் பெண்ணிற்கு பொன்னையா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், சம்பவம் குறித்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், பொன்னையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு.. மதுரை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி..!!