For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கிழிந்த ரூபாய் நோட்டுகளை இனி ஈசியாக மாற்றலாம்..!! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!

02:04 PM Apr 27, 2024 IST | Chella
கிழிந்த ரூபாய் நோட்டுகளை இனி ஈசியாக மாற்றலாம்     எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க
Advertisement

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், இன்னும் ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் புழக்கத்தில் தான் இருக்கின்றன. இதனால், பிறரிடம் இருந்து வாங்கக் கூடிய ரூபாய் நோட்டுகள் கிழிந்தோ அல்லது ஒட்டப்பட்டோ நம்மிடம் வந்துவிடும். ஆனால், அதை மாற்ற முடியாமல் பலரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். இந்நிலையில், ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை கூறியுள்ளது. அதை பின்பற்றினால், உங்களிடம் இருக்கும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எளிதாக மாற்றிக் கொண்டு, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

ரூபாய் நோட்டுகள் 2 துண்டுகளாக கிழிந்திருந்தாலும், முனைகள் மட்டும் எண்களை கொண்ட நோட்டுகளாக இருந்தாலும், அவை ரூபாய் நோட்டுகளாகவே கருதப்படும். எனவே, நோட்டுகளில் எண்கள் சேதமடையாமல் இருந்தால், அருகில் உள்ள பொதுத்துறை வங்கிகள் அல்லது தனியார் துறை வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம். அதேபோல், ரூபாய் நோட்டுகளில் முக்கிய பகுதிகளாக கருதப்படும் அசோகா பில்லர் சின்னம், மகாத்மா காந்தி, கேரண்டி, பிராமிஸ் கிளாஸ், சிக்னேச்சர், வாட்டர் மார்க் படம் மற்றும் அத்தாரிட்டி ஆகியவை சேதமடைந்து இருந்தாலும், அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

இருப்பினும், அதிகளவில் அழுக்கடைந்த மற்றும் தீயில் எரிந்து சேதமான ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டுமே மாற்ற முடியும். அதே நேரத்தில் வேண்டுமென்றே ரூபாய் நோட்டுகள் சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தால், அது நிராகரிக்கப்படும். ஒருவேளை வங்கிக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருக்க முடியாது என்றால், டிஎல்ஆர் எனப்படும் டிரிபிள் லாக் ரிசெப்டக்கிள் என்ற முறையை பயன்படுத்தி, ரிசர்வ் வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அதாவது, ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் உள்ள கவுன்டரில் இருந்து டிஎல்ஆர் கவரைப் பெற்று, நம்மிடம் இருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை போட்டு, அதில் உங்கள் பெயர், முகவரி, டெபாசிட் செய்யும் நோட்டுகளின் மதிப்புகள் போன்ற விவரங்களை நிரப்பி, கவரை மூடிவிட வேண்டும்.

பின்னர், இதற்கென ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பிரத்யேகமாக இருக்கும் பெட்டியில் போட்டுவிடலாம். அல்லது ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். அதற்கு உங்களுக்கு பேங்க் டிராப்ட்-ஆக வந்துவிடும். அதை அருகில் உள்ள வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த அடிப்படையில் ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.5,000 மதிப்புள்ள சேதமடைந்த நோட்டுகளை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு மேல் சேதமடைந்த நோட்டுகளை மாற்ற வேண்டும் என்றால், அதற்கான வங்கி சேவைக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

Read More : அடடே..!! இனி இவ்வளவு ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணலாமா..? பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!!

Advertisement