ஐயோ.! நீங்க யூஸ் பண்ற பேஸ்ட்ல கேன்சர் வருமா.? மருத்துவர்களின் ஷாக்கிங் ரிப்போர்ட்.!
நம் வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு பண்டைய காலங்களில் வேப்பங்குச்சி மற்றும் மிஸ்வாக் குச்சி போன்றவை பல் துலக்க பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு பல்பொடி உம்மி கறி போன்றவையும் பயன்படுத்தப்பட்டது. தற்போது அனைவரும் டூத் பேஸ்ட் பயன்படுத்தி வருகிறோம். இந்த டூத் பேஸ்ட்டில் சேர்க்கக் கூடிய ஒரு சில பொருட்களால் புற்றுநோய் வரக்கூடிய அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ரசாயனங்கள் கலந்திருக்கும் டூத் பேஸ்ட்டை தினமும் உபயோகிப்பதன் மூலம் ஒருவரை புற்றுநோய் தாக்க கூடும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
பெரும்பாலான டூத் பேஸ்ட்களில் ட்ரைக்ளோசன் என்ற வேதியியல் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆன்ட்டி மைக்ரோபியல் ஏஜென்ட் ஆகும். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கிறது. இந்த கெமிக்கலை பயன்படுத்துவதற்கு ஃபுட் அண்ட் ட்ரக் அத்தாரிட்டி அனுமதி கொடுத்திருந்தாலும் இந்த பொருளை தொடர்ந்து பயன்படுத்துவதால் பல்வேறு விதமான புற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இவை ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி புற்றுநோய் வருவதற்கு காரணமாக அமைவதாகவும் தெரிவிக்கின்றனர் .
மேலும் டூத் பேஸ்ட்களில் இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படும் சாக்கரின் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் இதனைத் தொடர்ந்து உபயோகிப்பதும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். டூத் பேஸ்ட்களில் நுரை வருவதற்காக டீத்தனோலமைன் என்ற கெமிக்கல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேதி பொருளை விலங்குகளின் மீது தடவி பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது நிரூபணமாகி இருக்கிறது. இதே பொருளைத் தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் மனிதர்களையும் புற்று நோய் தாக்க கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.