உங்கள் கிச்சன் சின்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறதா?? இதை மட்டும் செய்து பாருங்கள்..
ஒரு சிலரின் வீடுகளில் உள்ள கிச்சன் சின்க்கில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும். வீடு என்ன தான் சுத்தமாக இருந்தாலும் கிச்சன் சின்க் நாற்றம் எடுத்தால், முழு வீடும் நாறிவிடும். ஒரு சிலர், எஞ்சிய உணவுகளை நேரடியாக சின்க்கில் போடுவது உண்டு. இதனால் உணவு துண்டுகள், சின்க்கின் குழாய்களில் சிக்கிக்கொள்ளும். அதனை நாம் அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், துர்நாற்றம் வீசத் தொடங்கும். அப்படி உங்கள் கிச்சன் சின்க்கும் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறதா? இனி கவலை வேண்டாம், சின்க்கில் இருந்து வரும் துர்நாற்றம் மற்றும் அடைப்பை எப்படி சுலபமாக நீக்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..
உங்கள் சின்க்கில் தண்ணீர் வெளியேறுவதற்கான துளைகள் முழுமையாக அடைக்கப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது: முதலில், கால் கப் பேக்கிங் சோடாவை சின்க்கில் போடவும். பின்னர் அதன் மேல் எலுமிச்சை சாறை ஊற்றி, 15 நிமிடங்கள் விடவும். இப்போது அதில் வெள்ளை வினிகரை ஊற்றவும். இப்போது அதன் மேல் ஒரு குடம் வெந்நீரை ஊற்றவும். இப்படி செய்வதால், அடைப்பு பிரச்சனை நீங்குவது மட்டுமின்றி, சிங்கில் இருந்து வரும் துர்நாற்றமும் நீங்கும். இந்த எளிய முறையை நீங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பாருங்கள். மேலும் இது போன்று மீண்டும் ஏற்படாமல் இருக்க, மீதமுள்ள உணவை குப்பைத் தொட்டியில் வீசுவது நல்லது.
Read more: கவனம்… குடிக்க ஜூஸ் கொடுத்து, சிறுமி பலாத்காரம்!!!