இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு..!! முதலில் மருத்துவர் ஏன் இதை செய்கிறார் தெரியுமா..?
வலுவான பற்கள் மற்றும் ஈறுகளைப் பராமரிப்பது போலவே ஆரோக்கியமான நாக்கைப் பராமரிப்பதும் அவசியம். நாக்கில் தேங்குவது துர்நாற்றம், பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் அறிகுறியாகும். நாக்கு வலி, கொட்டுதல், எரிதல், வீக்கம் அல்லது உணர்வின்மை போன்ற எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்கும்.
இது ஈரமானது, கரடுமுரடான மேற்பரப்பு மற்றும் வெளிர் சிவப்பு மேலோட்டத்துடன் சம நிற இளஞ்சிவப்பு மேற்பரப்பு உள்ளது. நாம் நமது நாக்கை கவனமாகக் கவனிப்பது அவசியம், அதன் நிறம் மற்றும் வடிவத்தை அடிக்கடி தனிநபரின் உடல்நிலையைப் பற்றிய நுண்ணறிவைத் தருகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளியின் நாக்கை ஆய்வு செய்வது, அடிப்படை நோய்களின் ஆரோக்கியம் மற்றும் நிலையைப் புரிந்துகொள்வதற்கான மருத்துவ பரிசோதனையில் ஒரு முக்கியமான தொடக்க புள்ளியாகும்.
நாக்கின் வெவ்வேறு நிறங்களை வைத்து, நோயாளி என்ன நோயால் அவதிப்படுகிறார் என்பதைப் பற்றிய தகவல் தருவதுடன், அவர்களின் நிலையை சரியாக மதிப்பிடவும் உதவுகிறது. உங்களுக்கு சிவப்பு நிற நாக்கு இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கும். ஒரு வேலை மஞ்சள் நிற நாக்கு இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம். அதே போல பிங்க் நிற நாக்கு இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதாக எடுத்துகொள்ளலாம்.
மேலும் இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் அபாயத்தை குறிக்கிறது. ஒரு வேலை உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறத்தில் இருந்தால் உங்கள் உடலுக்கு நீர் சத்து குறைவாக உள்ளது என்பதை அறியலாம். இது நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது. காபி நிறமுள்ள நாக்கு இருந்தால், ஒருவேளை அது நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது. மேலும் நீலம் நிறமுள்ள நாக்காக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதை குறிப்பது மட்டுமின்றி சிறிய குமிழ்கள் உள்ள நாக்கு நீர்ழிவு பிரச்சினைகள் இருக்கிறது என்று பொருள்படும்
Read More : ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?