அட இது புதுசா இருக்கே.! உங்க நாக்கு கலர் வச்சு அது எந்த பாதிப்பின் அறிகுறி என்று கண்டுப்பிடிக்க டாக்டர்ஸ் அட்வைஸ்.!
நம் உடலில் சுவையை அறிவதற்கு முக்கியமான உறுப்பாக இருப்பது நாக்கு. இவை நமக்கு உணவின் சுவையை உணர்த்துவதோடு பேசுவதற்கும் முக்கிய உறுப்பாக பயன்படுகிறது. நம் உடலில் எலும்புகளே இல்லாத உறுப்பு என்றால் அது நாக்கு தான். நமது நாக்கு என்ன நிறத்தில் இருக்கிறது என்பதை வைத்தே அதன் மூலம் என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம் இன்று மருத்துவர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர். நாக்கின் நிறம் மற்றும் தன்மை ஆகியவையும் நோய்களை கண்டுபிடிப்பதற்கான அறிகுறியாக செயல்படுகிறது எனவும் தெரிவித்திருக்கின்றனர்
ஒருவரின் நாக்கு வெளிர் நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் தொற்று இருக்கலாம். மேலும் நீரிழிவு நோயின் அறிகுறியாகவும் நாக்கு வெள்ளை நிறத்தில் இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஒருவரது நாக்கு சிவப்பு அல்லது ஸ்ட்ராபெரி பழ நிறத்தில் இருந்தால் வைட்டமின் குறைபாடுகளை உணர்த்துகிறது. குறிப்பாக பி வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கு நாக்கு சிவப்பாக இருக்கும்
நாக்கு கருப்பு நிறமாக இருப்பது பொதுவாக ஆபத்து இல்லை என்றாலும் இவை மோசமான வாய் சுகாதாரம் இருப்பதை குறிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அதிகமான புகைப்பழக்கம், காபி மற்றும் தேநீர் அடிக்கடி பருகுவது போன்றவற்றால் நாக்கு கருப்பு நிறத்தில் இருப்பதாக கூறுகின்றனர். அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பயன்படுத்தினாலும் நாக்கு கருப்பு நிறம் ஆகும் எனவும் தெரிவிக்கின்றனர்.
நாக்கு நீல நிறம் அல்லது ஊதா நிறத்தில் இருந்தால் இதய பிரச்சினைகள் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர். நமது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதை காட்டும் அறிகுறியாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். ஒருவரது நாக்கின் ஓரத்தில் வெள்ளைத் திட்டுகள் இருந்தால் அதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் சொரியாசிஸ் நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுகி முறையான சிகிச்சியை எடுத்துக் கொள்வது நலம்.