கவனம்...! பான் - ஆதார் எண் இணைக்க நாளை கடைசி நாள்...! உடனே இதை செய்து முடிக்க வேண்டும்...!
பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நாளைக்குள் அனைவரும் பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) மூலம் தனிநபர்கள் அதை ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் 2024 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக பான் கார்டை ஆதார் உடன் இணைக்காவிட்டால் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.
உங்கள் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?
ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள எளிமையான வழிமுறை முதலில் நீங்கள் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometax.gov.in என்ற தளத்திற்குச் செல்லுங்கள். பிறகு “Our Services” என்பதன் கீழ், முகப்புப்பக்கத்தில் ‘இணைப்பு ஆதார்’ என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்யவும். அடுத்ததாக ‘‘Link Aadhaar Know About your Aadhaar PAN linking Status’ என்ற ஆப்ஷனை சொடுக்கவும். பிறகு உங்களுக்கு ஒரு புதிய பக்கம் திறக்கும்.
அதில் உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டை விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளிடவும். பிறகு உங்கள் விவரங்களை விவரங்களை பூர்த்தி செய்தவுடன், ‘View Link Aadhaar Status’ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்களுடைய பான் கார்டு எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டு உள்ளதா இல்லையா என்ற விவரம் உங்களுக்கு தெரிந்துவிடும்.