நான் அந்த கும்பலிடம் சிக்குவேனு எதிர்ப்பார்க்கல.. 40 மணி நேரம்.. மொத்த பணமும் போச்சு..!! - கண்ணீர் விட்ட பிரபல யூடியூபர்
யூடியூபர் அன்குஷ் பகுகுணா டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி மீண்டு வந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பதிவில் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது டிஜிட்டல் கைது மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த மோசடியில், சைபர் மோசடிக்காரர்கள், இலக்கு நபர்களை அழைப்புகள், SMS அல்லது சமூக ஊடக தளங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றனர். சட்ட அமலாக்க அதிகாரிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் இந்த நபர்கள், பணமோசடி, அடையாள திருட்டு அல்லது பிற கடுமையான குற்றங்கள் போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால் உடனடியாக “டிஜிட்டல் கைது” என்று அச்சுறுத்தப்படுகிறார்கள். உரையாடல் முன்னேறும்போது, மோசடி செய்பவர்கள், பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பறிக்க முயற்சிக்கின்றனர். அந்த வரிசையில் யூடியூபர் அன்குஷ் பகுகுணாவும் சிக்கியுள்ளார்.
அவர் கூறுகையில், டிஜிட்டல் அரஸ்ட் கும்பலின் பல்வேறு மோசடிகள் குறித்து தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், நானே அந்த கும்பலிடம் சிக்குவேன் என்று நினைக்கவில்லை. சுமார் 40 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் கும்பலிடம் பிணைக் கைதியாக இருந்தேன். நான் வைத்திருந்த மொத்த தொகையையும் இழந்தேன். இதனால் கடந்த 3 நாட்களாக சமூக ஊடகங்களில் நான் ஆக்டிவாக இல்லை. நான் இன்னும் அந்த அதிர்ச்சியில்தான் இருக்கிறேன். இதனால் நான் பணத்தை இழந்தேன். நான் என் மன ஆரோக்கியத்தை இழந்தேன், இது எனக்கு நடந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட பார்சலில் என்னுடைய பெயர் இருப்பதாகவும், அதில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகக் கூறி மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளேன். சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட பார்சலில் என்னுடைய பெயர் இருப்பதாகவும், அதில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகக் கூறி மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளேன்.
Read more ; மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமின்.!! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு