நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..!! இதுதான் ரூல்ஸ்..!! காளை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை..!! போட்டிக்கான விதிமுறைகள் வெளியீடு..!!
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். அந்த வகையில், நாளை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, காளை உரிமையாளர்களுக்கான விதிமுறைகளை மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகள் :
* ஜல்லிக்கட்டு போட்டியில் போலியான டோக்கன்களை பயன்படுத்தி நுழைய முற்படும் காளை உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
* காளைகளை அழைத்து வரும் உரிமையாளருடன் ஒரு நபரும் சரியாக காலை 5 மணிக்கு வர வேண்டும்.
* முல்லை நகரில் உள்ள அனுமதிக்கப்படும் இடத்தில் காளைகளை வரிசைப்படுத்தி கொண்டு வர வேண்டும்.
* அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் அவிழ்த்துவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
* 1 முதல் 100 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் அனுமதிக்கப்படுவர்.
* அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திலும் 100, 100 காளைகள் வீதம் மாலை 4 மணி வரை அனுமதிக்கப்படுவர்.
* காளைகளை கொண்டு வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன்கள் அவசியம். காளை உரிமையாளர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும்.
* காளையுடன் வரக்கூடிய 2 நபர்களும் மது அருந்தி வரக்கூடாது.