For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"எனக்கு கள்ளக்காதலன் தான் முக்கியம், நீ இல்ல" கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி; நடுரோட்டில் நடந்த கொடூரம்..

man stabbed his wife in road who refused to live with him
07:25 PM Jan 13, 2025 IST | Saranya
 எனக்கு கள்ளக்காதலன் தான் முக்கியம்  நீ இல்ல  கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி  நடுரோட்டில் நடந்த கொடூரம்
Advertisement

சென்னை திருவல்லிகேணி, எல்லீஸ் சாலையில் 42 வயதான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 27 வயதான ஜோதி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில், இவர்களுக்கு தற்போது மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜோதி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனியாக சென்றுவிட்டார். இந்நிலையில், அவர் தற்போது மேடவாக்கம், புதுநகர் 4வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார். வருமானத்திற்காக, இவர் மேடவாக்கத்தில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் பியூட்டிசியனாக வேலை செய்து வருகிறார்.

Advertisement

இதனிடையே, இவருக்கும் அவரது கணவனின் அக்கா துளசியின் மருமகன் க்ரிஷ் என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்க்கு ஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று ஜோதிக்கு போன் செய்த மணிகண்டன், தான் சபரிமலையில் இருந்து வாங்கி வந்த பிரசாதத்தை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, மணிகண்டன் பள்ளிக்கரணையில் ஜோதியைச் சந்தித்து, தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, மணிகண்டனை செருப்பால் அடித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும், இரவு 8.40 மணி அளவில் மணிகண்டன் மேடவாக்கம் கூட்ரோடு அருகே இருப்பதை தெரிந்துகொண்ட ஜோதி, தனது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தியுடன் மோட்டார்சைக்கிளில் அங்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், மது போதையில் இருந்த மணிகண்டன், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மணிகண்டனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, படுகாயம் அடைந்த ஜோதி மற்றும் கிருஷ்ணமூர்த்திக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, கிருஷ்ணமூர்த்தியை அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் மணிகண்டணை கைது செய்துள்ளனர்.

Read more: தமிழ்நாட்டில் மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! நாளை இந்த 3 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை..!!

Tags :
Advertisement