For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே...! நாளை பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்திற்கும் பொது விடுமுறை...!

Tomorrow is a public holiday for schools and colleges
05:35 AM Jun 16, 2024 IST | Vignesh
தமிழகமே     நாளை பள்ளி  கல்லூரி உள்ளிட்ட அனைத்திற்கும் பொது விடுமுறை
Advertisement

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார்.

துல்ஹஜ் பிறை கடந்த 8-ம் தேதி தென்பட்டதால் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் தமிழ்நாடு அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement