முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

OPS-க்கு அடுத்த சிக்கல் ஆரம்பம்...! சொத்து குவிப்பு வழக்கில் இன்று நடக்கும் விசாரணை...!

07:03 AM Apr 23, 2024 IST | Vignesh
Advertisement

ஓ. பன்னீர்செல்வம் மீதான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் கொடி,சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார்.

கடந்த 2001முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஒ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்ட நிலையில், ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க தென் மாவட்டத்திற்கென மதுரை மாவட்டத்தில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தபட்டது. இதனை தொடர்ந்து வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றபட்டது.

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்பு தரப்பில், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை எனவும் புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்குகளில் இருந்து அனைவரையும் விடுவித்து 2012 ஆம் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆனது வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓபிஎஸ் தரப்பில் சென்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிடவில்லை என்றும் வழக்கின் தன்மை தகுதியின் அடிப்படையில் நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கிறார் எனக்கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்து கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தாமாக முன் வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்த நிலையில், தற்போது நான்காவதாக ஓ.பன்னீர் செல்வம் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

Advertisement
Next Article