முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு...! உதயநிதி, சேகர்பாபு அமைச்சர்களாக நீடிக்கலாமா என இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்...!

05:59 AM Mar 06, 2024 IST | 1newsnationuser2
Advertisement

உதயநிதி, சேகர்பாபு அமைச்சர்களாக நீடிக்கலாமா என இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்.

Advertisement

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு, உதயநிதி கலந்து கொண்டனர். மாநாட்டில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம் என்று பேசினார்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, உதயநிதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களையும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

உதயநிதி, சேகர்பாபு அமைச்சர்களாக நீடிக்கலாமா என இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்.

Advertisement
Next Article