For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகள் கவனத்திற்கு... பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி...! உடனே விரையுங்கள்...

07:28 AM Nov 15, 2023 IST | 1newsnationuser2
விவசாயிகள் கவனத்திற்கு    பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி     உடனே விரையுங்கள்
Advertisement

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள இன்று கடைசி நாள் ஆகும்.

எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலை பெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர்காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய்த்தாக்குதல் நிலச்சரிவு, இயற்கை சீற்றத்தினால் தீப்பிடித்தல் ஆகிய இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு பயிர் அறுவடை பரிசோதனையின் அடிப்படையில் பயிர்க் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும்.

Advertisement

ஆகஸ்ட் மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல் பயிருக்கு தற்பொழுது விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்யலாம். நடப்பாண்டு யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் (சம்பா) பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.512 செலுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாளாகும் என்பதால், உடனடியாக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய அடங்கல், நில உரிமைப்பட்டா, ஆதார் அட்டை நகல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்துடன் உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து, இடர்பாடு ஏற்படும் காலத்தில் பயிர்க் காப்பீட்டுத்தொகை பெற்று பயன்பெறலாம்.

Tags :
Advertisement