For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Neet Exam 2024: நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்...!

06:10 AM Mar 20, 2024 IST | 1newsnationuser2
neet exam 2024  நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்
Advertisement

நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்றே கடைசி நாள்.

தேசிய தேர்வுகள் முகமையால் (என்டிஏ) ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி,2024-25 கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

Advertisement

இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆணையம் வாய்ப்பு வழங்கியது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால், neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் மார்ச் 20-ம் தேதிக்குள் செய்ய வேண்டும். இன்றுடன் அதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ளதால் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌.

Advertisement