For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று புரட்டாசி வெள்ளிக்கிழமை..!! மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்..!!

On Puratasi Friday, worshiping Mahalakshmi brings all the blessings.
07:31 AM Sep 27, 2024 IST | Chella
இன்று புரட்டாசி வெள்ளிக்கிழமை     மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
Advertisement

புரட்டாசி மாதம் புண்ணியங்களை தரக்கூடிய மாதமாகும். புரட்டாசி மாதம் புண்ணியங்களை தரக் கூடிய மாதமாகும். இம்மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு செல்வதும், பெருமாளை வழிபடுவதும் எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்கும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பானது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் புரட்டாசி மாதத்தில் வரும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையும் சிறப்பானதாகும்.

Advertisement

புரட்டாசி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகால கடனில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு சிறந்தது. குறிப்பாக, புரட்டாசி வெள்ளியில், மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

ஒவ்வொரு வெள்ளி அன்று லட்சுமி தேவியை வணங்குவதோடு சில விஷயங்களை பின்பற்றினால் துன்பங்கள் விலகி அவரின் அருள் கிடைப்பதோடு, பணமும், தானியமும் குறையாத அருளை பெறலாம். வெள்ளிக்கிழமை லட்சுமிதேவிக்கு கற்பூரம் காட்டி வணங்கி முழு வீட்டிற்கும் காட்டுங்கள். இதன் மூலம் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வரும். மேலும், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும். குறிப்பாக, பச்சை கற்பூரத்தின் வாசம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும் படி செய்வதால் மகாலட்சுமி வசியம் ஏற்படும்.

தேன் கலந்த பாயசம் செய்து மகாலட்சுமிக்கு படைத்து வணங்கிய பிறகு முதலில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள். இதன் மூலம் பணப் பஞ்சம் தீரும். விஷ்ணு புராணத்தின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை லட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது சிறந்த பலனை தரும். வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யலாம். எறும்புகளுக்கு இனிப்பு பொருட்களை கொடுக்கலாம்.

வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சுவை கொண்ட பழங்கள், ஊறுகாய் போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது. லட்சுமி தேவியை வணங்கும்போது புளிப்பு சுவை கொண்ட உணவை பிரசாதமாக படைக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை கடன் கொடுக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்ட பணம் திரும்ப வருவது கடினம் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, வெள்ளி அன்று கடன் கொடுப்பதால் உறவுகளிலும் கசப்பும், விரிசலும் ஏற்படக்கூடும்.

Read More : பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! இலவசம் இலவசம்..!! தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
Advertisement