பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்...! இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை...!
இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டு வைத்தனர். இந்த நிலையில் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ( 10.02.2024 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.