இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...? தமிழக அரசு தகவல்...!
இன்று சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னையை விட்டு விலகி சென்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் மிதக்கிறது. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னை விட்டு விலகி ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றது. இதன் காரணமாக படிபடியாக மழை குறையும் என்றும், காற்றில் வேகம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது, வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.