தமிழகமே... தொடர் கனமழை..! இன்று எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை...? முழு விவரம்...
விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
நள்ளிரவு முழுவதும் மழை நீடித்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் அதிகாலை 2.30 மணி நேர நிலவரப்படி சுமார் 82 மில்லிமீட்டர் மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.