முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களே ஸ்கூலுக்கு கிளம்பிட்டீங்களா..? உங்கள் மாவட்டத்திற்கும் இன்று விடுமுறை..!! வெளியான புதிய அறிவிப்பு..!!

07:17 AM Dec 09, 2023 IST | 1newsnationuser6
Advertisement

புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், கனமழை எச்சரிக்கையால் நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், 4 மாவட்டங்களில் பெரும்பாலான தாலுக்காகளில் 5-வது நாளாக வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில், தனியார் பள்ளிகள், சனிக்கிழமை அன்று பள்ளிகளை திறக்கக் கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜன் முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் இன்று சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் மழை எச்சரிக்கை உள்ளதாலும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (9-ம் தேதி) ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
சிறப்பு வகுப்புகள்சென்னைதிண்டுக்கல்பள்ளிகளுக்கு விடுமுறைமாணவர்கள்
Advertisement
Next Article