For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று நடிகர் விஜய் கட்சி கொடி அறிமுகம்... நாம் தமிழர் சீமான் வாழ்த்து...!

Today, actor Vijay launched the party flag... We congratulate Seeman, a Tamil
07:23 AM Aug 22, 2024 IST | Vignesh
இன்று நடிகர் விஜய் கட்சி கொடி அறிமுகம்    நாம் தமிழர் சீமான் வாழ்த்து
Advertisement

கட்சி கொடியை அறிமுகம் செய்யும் நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.

Advertisement

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று கட்சியின் தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து ஏற்றி வைப்பதோடு, கொடி பாடலையும் வெளியிடுகிறார். கொடியை அறிமுகம் செய்யும் நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த் தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய் அவர்கள் இலட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement