முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மோடியை பழிவாங்க டிச.13ல் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படும்!… தீவிரவாதி மிரட்டல்!… பலத்த பாதுகாப்பு!

09:30 AM Dec 07, 2023 IST | 1newsnationuser3
Advertisement

நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisement

அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றவர் குர்பத்வந்த் சிங் பன்னு. காலிஸ்தான் தீவிரவாதியும் தடை செய்யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பின்தலைவருமான இவர் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் நரேந்திர மோடி அரசு தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் இதற்கு டிசம்பர் 13-ம் தேதி பதிலடி கொடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் இது இந்திய நாடாளுமன்றத்தின் அடித்தளத்தையே அசைக்கும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலை தொடர்ந்து பாதுகாப்பு அமைப்புகள் மிகுந்த விழிப்புடன் உள்ளன.

இதுகுறித்து டெல்லி காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாங்கள் விழிப்புடன் இருந்து வருகிறோம். விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம் என்றார்.

இந்திய நாடாளுமன்றம் மீது கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையை சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் நினைவு தினம் வரும் 13-ம்தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இந்த தாக்குதலுக்காக கடந்த 2013-ல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் படத்தையும் பன்னு தனது வீடியோவில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
attack on ParliamentTerrorist threatதீவிரவாதி மிரட்டல்நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படும்பலத்த பாதுகாப்பு
Advertisement
Next Article