"இப்போ என்ன பண்ணுவீங்க.."! அங்கீகாரம் இல்லா கட்டிடத்தில் ராமர் கோவில், பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் சிலைகள்.!! மாஸ்டர் ப்ளான்.!
குஜராத் மாநிலத்தில் முறையாக அங்கீகாரம் பெறப்படாத கட்டிடம் இடிக்கப்படுவதை தடுப்பதற்காக இரும்பு வியாபாரி செய்த செயல் ஆஞ்சநேயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.
குஜராத் மாநிலத்தின் அங்கலேஷ்வரில் உள்ள காட்கோல் கிராமத்தில் ஜனதா நகர் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருபவர் மோகன்லால் குப்தா. உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரியான இவர் கடந்த வருடம் வாங்கிய கட்டிடத்தில் முறையான அனுமதி இன்றி அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்சுக் ரகாசியா என்ற நபர் பருச்-அங்கிலேஷ்வர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மோகன்லால் குப்தா தனது அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியில் ஸ்ரீ ராமர் சீதா தேவி மற்றும் லட்சுமண் ஆகியோரின் சிலைகளுடன் கூடிய கோவிலை கட்டி இருக்கிறார். மேலும் அந்தக் கோவிலுக்கு பாதுகாப்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிலைகளையும் நிறுவி இருக்கிறார். மேலும் இந்தக் கோவில் திறப்பு விழாவை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஜனவரி 22 ஆம் தேதி கிராம மக்கள் அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாக திறந்திருக்கிறார்.
தனது கட்டிடம் இடிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் ராமர் கோவிலை வீட்டு மாடியில் அமைத்திருப்பதாக புகார்தாரர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக பேசிய மோகன்லால் குப்தா தான் முறையான அனுமதி பெற்று கட்டிடங்களை கட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார் . தனக்கு எதிராக சிலர் சதி வேலை செய்வதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். இவரது கட்டிடத்தை பார்வையிட்ட நகர் புற அதிகாரிகள், 7 நாட்களுக்குள் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர். கட்டிடம் ஈடுபடுவதை தடுப்பதற்கு மொட்டை மாடியில் ராமர் கோவில் மற்றும் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.