For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு..! காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும்...!

To celebrate Diwali, the public should burst only green crackers that are low in noise and cause low air pollution.
07:14 AM Oct 21, 2024 IST | Vignesh
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு    காலை 6 முதல் 7 மணி வரையிலும்  இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும்
Advertisement

தீபாவளியை கொண்டாட, குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.

Advertisement

இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது வழக்கம்.. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் படி, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், தீபாவளி தினத்தின்போது காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட, குறைந்த ஒலி மற்றும் குறைந்த காற்று மாசை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement