மகிழ்ச்சி...! குரூப் 4 பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு...!
குரூப் 4 பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் குரூப் 4 காலிப்பணியிடங்களில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இதனால் மொத்தம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6,724 உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கூடுதலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் அரசு துறைகளில் 75,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார். அதில் டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டும் 17,595 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறினார். அதன் அடிப்படையில், குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வெறும் 480 காலிப்பணியிடங்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் சற்று வருத்தம் அடைந்தனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 4 பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.