For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TNPSC முக்கிய அறிவிப்பு...! மொத்தம் 861 காலி பணியிடம்... செப்டம்பர் 11-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம்...!

TNPSC Important Notification... Total 861 vacancies
07:10 AM Aug 14, 2024 IST | Vignesh
tnpsc முக்கிய அறிவிப்பு     மொத்தம் 861 காலி பணியிடம்     செப்டம்பர் 11 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம்
Advertisement

861 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நவம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், உதவி வேதியியலர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து), திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2), வரைவாளர் (கிரேடு-3), விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் என பல்வேறு விதமான பதவிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு தகுதியும் பணியே மாறுபடும். உரிய கல்வித் தகுதியும், வயது வரம்பு தகுதியும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி செப்டம்பர் 11-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு நவம்பர் 9 மற்றும் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, காலியிடங்கள், தேர்வு கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement