TNPSC குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம்..!! இன்றே கடைசி நாள்..!! தேர்வர்களே மறந்துறாதீங்க..!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. இதில் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றது. அதாவது கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 15.8 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதற்கிடையே, குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரிப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி, 480 இடங்கள் கூடுதல் காலிப்பணியிடங்களாக சேர்க்கப்பட்டு, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6,724 ஆக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து, கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 9,491 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவம்பர் 21ஆம் தேதியே கடைசி ஆகும். அதாவது, இன்றே கடைசி. தேர்வில் வெற்றி பெற்று, சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் அதற்குள் தங்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். எனவே, இன்று மாலை வரையில் காத்திராமல் உடனடியாக உங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கேட்டுக் கொண்டுள்ளது.
Read More : விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை..!! உயரதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட உதயநிதி ஸ்டாலின்..!!