TN School | மாணவர்களே உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்க வேண்டுமா..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் உள்ளே..!!
தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இந்தாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
TN School | தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள், பாடப்புத்தகங்கள் ,பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவரது கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அரசுப்பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பட்ஜெட்டில், இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மட்டுமல்லாது, இனி அரசு உதவி பெறும் மாணவிகளுக்கும் உயர் கல்வி பயில இந்த திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
ஆகவே, இனி குடும்ப தலைவிகள் முதல் மாணவர்கள் வரை அரசு 1,000 வழங்கி வருகிறது. அதன்படி, தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி 1000, புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7aஅம் தேதி 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அதேபோல், இனி ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி உயர்க்கல்வி பயிலும் மாணவர்களின் வங்கிக் கணக்கிலும் 1000 செலுத்தப்படும்.
English Summary : Tamil Nadu Girl Student Rs 1000 Scholarship Scheme