ஃபெங்கால் புயல் எப்போது எந்த இடத்தில் கரையை கடக்கிறது தெரியுமா..? பாதிப்பு எப்படி இருக்கும்..?
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர். மேலும், 5 மாவட்டங்களுக்கும் தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால், அதை கணிப்பது சிரமமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கால் புயல் சனிக்கிழமை இரவு சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தெற்கு ஆந்திராவிலும், வட தமிழக கரையோரங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் Typist வேலை..!! 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!