For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

JOBS: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வேலைவாய்ப்பு.! ரூ.2,50,000/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

09:37 PM Feb 26, 2024 IST | Mohisha
jobs  தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வேலைவாய்ப்பு   ரூ 2 50 000   வரை சம்பளம்   உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இங்கு காலியாக உள்ள தலைமை நிதி அதிகாரி பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள தலைமை நிதி அதிகாரி பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

Advertisement

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முதுகலை நிதியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு எம்.பி.ஏ பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக மாதம் ரூ.2,00,000- ரூ.2,50,000/- வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் கல்விச் சான்றிதழ்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திற்கு 19,03,2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

English Summary: Tamil Nadu School Education Department Offers Jobs for CFO With good salary package.

Read More: MWC 2024: கூகுள் அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டின் 6 புதிய வசதிகள்.! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.!

Advertisement