அடடே.. 'பத்திர பதிவுத்துறை' வாரி வழங்கும் சலுகைகள்.! அட்டகாசமான அறிவிப்பு.!
தமிழக அரசின் பல்வேறு துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதைப் போல பத்திரப்பதிவு துறையும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது . மேலும் பத்திர பதிவுத்துறை வருவாய் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கு 25,000 கோடி ரூபாய் வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக பொது மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது வருவாய்த்துறை.
இதன் அடிப்படையில் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ நாட்களில் பத்திரப்பதிவுகளுக்கான டோக்கன் எண்ணிக்கையை அதிகரித்து புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு நூறு டோக்கன்கள் வழங்கப்படும். இந்த எண்ணிக்கை சுபமுகூர்த்த தினங்களில் அதிகரிக்கப்படும் எனவும் வருவாய் துறை தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் பதிவுத்துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு சார்பதிவாளர் இயங்கும் வருவாய் துறை அலுவலகங்களில் வழங்கப்படும் 100 டோக்கன்கள் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ தினங்களில் 150 டோக்கன்களாக வழங்கப்படும் என பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் 2 பதிவாளர்கள் இயங்கும் அலுவலகங்களில் வழங்கப்படும் 200 டோக்கன்கள் 300 டோக்கன்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள் வழங்கப்படுவதோடு 12 சிறப்பு தட்கல் டோக்கன்களும் வழங்கப்படும் என பத்திர பதிவுத்துறை அறிவித்திருக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஜனவரி 31ஆம் தேதி வரை அதிக டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆவணப் பதிவுகளும் அதிகை எண்ணிக்கையில் நடப்பதால் வருவாய்த்துறை மகிழ்ச்சியில் இருக்கிறது. இது தொடர்பாக பத்திர பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் " பதிவுத்துறை அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய கூட்டு வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி சென்னையில் 137 அடுக்குமாடி குடியிருப்புகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 12 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.
இனிவரும் காலங்களிலும் பத்திர பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகின்ற ஜனவரி 31ம் தேதி வரை கூடுதல் டோக்கன் வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் பத்திரப்பதிவுகளின் மூலம் அரசிற்கு 168.83 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.