For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஹேப்பி அண்ணாச்சி.." மொத்த சிட்டிக்கும் ஒத்த டிக்கெட் போதும்.! மெட்ரோ முதல் சிட்டி பஸ் வரை! அரசின் அசத்தலான திட்டம்.!

12:01 PM Jan 08, 2024 IST | 1newsnationuser7
 ஹேப்பி அண்ணாச்சி    மொத்த சிட்டிக்கும் ஒத்த டிக்கெட் போதும்   மெட்ரோ முதல் சிட்டி பஸ் வரை  அரசின் அசத்தலான திட்டம்
Advertisement

வெளிநாடுகளில் இருப்பதைப் போன்று ஒரே பயணச்சீட்டில் மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பொதுமக்களிடம் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயில் பயன்படுத்தி வருகின்றனர். நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் பொருட்டு மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை நகரின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் நிறுவப்பட்டு 2010 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

சென்னை நகரில் புது போக்குவரத்து மற்றும் மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிப்பதற்காக மாநகரம் முழுவதும் மெட்ரோ மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே பயண சீட்டில் பயணம் செய்யும் திட்டம் குறித்து 2022 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இது குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மெட்ரோ மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே பயண சீட்டில் பயணம் செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார் . மேலும் அரசின் மெட்ரோ ரயில்கள் மற்றும் மாநகரப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறைவதோடு சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் கட்டுப்படுத்தப்படும். எனவே பொதுமக்களை கவரும் வகையில் இது போன்ற திட்டங்களை மும்முறமாக செயல்படுத்த வேண்டும் எனவும் கூறி இருந்தார் .

ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இந்தத் திட்டம் செயல்படும் செய்தி மற்றும் திட்டத்திற்கான தகவல்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் போக்குவரத்து ஆர்வலர் ஒருவரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்திருக்கும் மாநகர போக்குவரத்து ஆணையம் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு திட்டத்திற்கான செயலியை அறிமுகப்படுத்துவது தொடர்பான கூட்டம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொள்கை அளவிலான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது . ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர் இதன் அறிவிப்பு தேதி மற்றும் டெண்டர் வெளியாகும் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Tags :
Advertisement