For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Senthil Balaji | சிக்கலில் சிக்கித் தவிக்கும் செந்தில் பாலாஜி..!! அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!!

Former minister Senthil Balaji's plea seeking production of bank documents in illegal remittance case dismissed.
06:14 PM Jul 08, 2024 IST | Chella
senthil balaji   சிக்கலில் சிக்கித் தவிக்கும் செந்தில் பாலாஜி     அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு
Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால், கைது செய்யப்பட்டார். தற்போது ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

மேலும், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டதால், இன்னும் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில், வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக வழங்கக் கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் சமீபத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அந்த மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அதே நேரத்தில் கரூர் சிட்டி யூனியன் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு அமலாக்கத்துறை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Read More : தூங்க போகும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement