For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TN 12th Result: 5,161 மாற்றுத்திறன் மாணவர்கள், 115 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்..!

10:29 AM May 06, 2024 IST | Kathir
tn 12th result  5 161 மாற்றுத்திறன் மாணவர்கள்  115 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Advertisement

TN 12th Result: தமிழ்நாட்டில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் சுமார் 7,80,550 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

Advertisement

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி சரியாக 9.30 மணிக்கு வெளியானது. மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும், இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://www.dge.tn.gov.in மற்றும் https://www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மதிப்பெண் பட்டியல் தேவைப்படும் மாணவர்கள் இன்றே பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கடந்த ஆண்டை போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,52,165 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,25, 305 பேர் (92.37 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். 4, 08, 440 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 3, 93,890 பேர் (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், தற்போது 94.56 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த 12ஆம் வகுப்பு பொத்துத்தேர்வை மொத்தம் 5,603 மாற்றுத்திறனாளி மாணவர்கள் 1 எழுதிய நிலையில் 5,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 12ஆம் வகுப்பு பொத்துத்தேர்வு எழுதிய 125 சிறைவாசிகளில் 115பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 97.42% தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளது. 97.25% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது. 90.47% தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது

Advertisement