திருவண்ணாமலை நிலச்சரிவு: சிறுவன் உள்பட இருவரின் உடல் மீட்பு..!
ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் திருவண்ணாமலை பகுதியிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில் திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வஉசி நகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.
இதில் ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதி, அவரது மகன், மகள் மற்றும் உறவினரின் மூன்று சிறுமிகள் என மொத்தம் ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கினர். பேரிடர் மீட்புக்குழு நேற்றைய தினமே சம்பவ இடத்திற்கு சென்றாலும், இரவு நேரம் என்பதல் மீட்பு பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இன்று அதிகாலை முதல் தான் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இன்றும் திருவண்ணாமலையில் மழை பெய்துவந்த நிலையில் மீட்பு பணிகள் நடந்து வந்தன, இதனிடையே திருவண்ணாமலையில் மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு இரண்டாவது முறையாக ஏற்பட்டது, அதனைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக, தீப மலையின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 2000 அடிக்கு மேல் மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி நடந்து வந்த நிலையில், இரன்டு பேரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. மீட்பு பணியின்போது மண்ணை அகற்றும்போது பொக்லைன் இயந்திரத்தின் முன்பக்க பக்கெட்டில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டது. திருவண்ணாமலையில் 7 பேர் நிலச்சரிவில் சிக்கிய நிலையில் இருவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இரண்டு உடல்களில் ஒன்று சிறுவனின் உடல் என்றும் கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி 24 மணி நேரத்திற்கு பிறகு இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு உடல்கள் தென்படுவதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
Read More: பிள்ளைகளை வேனில் அனுப்பும் பெற்றோர்களே, கவனம்!!! டிரைவரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…