திருவண்ணாமலை நிலச்சரிவு..!! உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இந்த பயங்கர மழையால், அண்ணாமலையார் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென உருண்டு கீழ்நோக்கி வந்தன. இதனால், பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி சரிந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன.
அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கிக் கொண்டது. இதில், குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்திலும் 400 அடிக்கு மண்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலச்சரிவால் திருவண்ணாமலையில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, திருவண்ணாமலை சம்பவம் வருத்தமளிப்பதாக கூறினார். இதற்கிடையே அவர், கூலி படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் செல்வது குறிப்பிடத்தக்கது.
Read More : யு 19 ஆசிய கோப்பை 2024..!! வரலாறு படைத்த வங்கதேசம்..!! மோசமான தோல்வியடைந்த இந்தியா..!!