அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்..!! ஆடிப்போன அமைச்சர்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
கடந்த 2012இல் சிம்பு நடிப்பில் வெளியான படம் 'போடா போடி'. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து 'நானும் ரவுடிதான்' என்ற படத்தை இயக்கினார். அப்போது முதல் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில், இருவரும் 2022ஆம் அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று புதுச்சேரி சென்ற நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அமைச்சரிடம் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 'சீகல்ஸ்' ஓட்டலை விலைக்கு தருமாறு விக்னேஷ் சிவன் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு அமைச்சரே ஆடிப்போய் விட்டார்.
அந்த ஓட்டல் அரசுக்கு சொந்தமானது என்று அமைச்சர் கூறியபோது, ஒப்பந்த அடிப்படையிலாவது அந்த ஓட்டலை வாடகைக்கு தருவீர்களா? என விக்னேஷ் சிவன் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர், 'புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது' என்று தெரிவித்துவிட்டார். இதையடுத்து, கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளன. அதில், ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா? என்று விக்னேஷ் சிவன் கேட்டுள்ளார்.
அது, ‘கடந்த 2017ஆம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஏதாவது இடம் கிடைக்குமா? என விக்னேஷ் சிவன் கேட்டபோது, 'புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
அதற்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்தினால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம்' என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ் சிவன், துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read More : ஒரே நேரத்தில் கணவனும், கள்ளக்காதலனும்..!! வலி தாங்க முடியல..!! விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!!